ஆயிரம் பன்னீர்செல்வங்களைப் பார்த்தவர்கள் நாங்கள்: சசிகலா
பன்னீர்செல்வம் போன்ற ஆயிரம் பேரைப் பார்த்துள்ளதாகவும், அதனால் தனக்கு பயமில்லை என்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சசிகலா, பன்னீசெல்வம் அதிமுகவிற்கு விசுவாசமாக இல்லை. பிரித்தாள எண்ணுகிறார். அவரால் 1.5 கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவை ஒன்றும் செய்ய இயலாது. தொண்டர்கள் இருக்கும்போது எந்த கொம்பனாலும் அதிமுகவை பிரிக்க இயலாது என்றார்.
இதுகாபந்து அரசாக இருந்தாலும் அதிமுக அரசுதான். அதிமுக அரசு தொடருவதற்காக எனது உயிரையும் விடத் தயார். காவல்துறைக்கு இடையூறு ஏற்படாமல் அமைதிப் போராட்டம் தொடரும். அதிமுகவை அழிக்க சதித்திட்டம் தீட்டுவதில் பலரும் ஈடுபட்டனர். எத்தனை ஆண்கள் எதிர்த்தாலும் தனியொரு பெண்ணாக சாதிப்பேன். 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இணைந்து பயணித்துள்ளேன். எனக்கு பயமில்லை என்று சசிகலா கூறினார்.