“நான் பொறுப்புக்காக வரவில்லை.. பொறுப்பாக இருக்க வந்துள்ளேன்” - சரத்குமார்

“மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது” - தன் மீதான விமர்சனம் குறித்த கேள்விக்கு சரத்குமார் பதில்
sarathkumar
sarathkumarpt web

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த சரத்குமார் நேற்று பாஜகவில் தன் கட்சியை முழுமையாக இணைத்திருந்தார்.

sarathkumar
பாஜகவில் கட்சியை இணைத்தார் சரத்குமார்..!

இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியவற்றை பார்க்கலாம்...

கேள்வி - ‘பாஜக - சமக இணைப்பு ஏன்?

பதில் - “3 வது முறையாக பிரதமராக மோடி வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இருக்கிறேன். காரணம், பிரதமராக மோடி மீண்டும் வரும் போதுதான் நாடு செழிக்கும்.. அதற்கு இவர்களோடு இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என தோன்றியது. இதற்காகவே இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் 2026-ல் இரு திராவிட கட்சிகளும் இல்லாமல் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது”

கேள்வி - ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?’

பதில் - “பாஜக முன்னோடிகள் சொல்வதை செய்ய தயாராக இருக்கிறேன். அவர்கள் இடும் கட்டளையை செயல்படுத்துவேன். கூட்டணியில் இருக்கும் போது எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கேட்கலாம். கட்சியில் இணைந்த பிறகு அவர்கள் சொல்வதைதான் கேட்க வேண்டும். அந்த நிலையில்தான் நான் உள்ளேன்”

sarathkumar
'மிஷன் திவ்யஸ்த்ரா' - அக்னி-5 ஏவுகணை சோதனையின் வெற்றிக்கு பின்னால் இருந்த பெண் விஞ்ஞானி ’ஷீனா ராணி’!

கேள்வி - ‘பாஜகவோடு இணைய கட்சி நிர்வாகிகளை கேட்டு முடிவெடுக்கவில்லை’ என்ற விமர்சனம் சமக நிர்வாகிகள் மத்தியில் எழுவது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் - “ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதில் சொல்லலாம். வைரலாக வேண்டும் என்ற ஆசையோடு செய்து கொண்டிருக்கிறார்கள். ‘இரவு தூக்கம் வரலையாம்.. மனைவியிடம் கருத்து கேட்டாராம்...’ என்று சொல்கிறார்கள். மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? இதை புரியாமல் கருத்து கூறுவோரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டுமா?

மட்டுமன்றி, ஒரே ஒரு கட்சி நிர்வாகிதான் அப்படி பேசி இருந்தார். அவர் மீண்டும் பேசிய விடியோவில் ‘காலதாமதமாக வந்ததால் தெரியாமல் சொல்லிவிட்டேன்’ என்று சொல்லி இருப்பார். அவர் அறியாமல் செய்த தவறை அவர் உணர்ந்து வந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆகவே இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. தேவை இல்லை. நேரத்தை வீணாக்க விருப்பம் இல்லை”

sarathkumar
'நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க.' பாஜகவில் கட்சியை இணைத்த சரத்குமார்.. கொந்தளித்த சமக தொண்டர்!

கேள்வி - “பாஜகவில் உங்களுக்கு பொறுப்பு வழங்கப்படுமா?”

பதில் - “நான் பொறுப்புக்காக வரவில்லை.. பொறுப்பாக இருக்க வந்துள்ளேன்”

கேள்வி - பாஜகவில் இணைந்த பிறகு நீங்கள் பாஜக மாநில தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராகவோ ஆக வேண்டும் என கோரிக்கைகள் எழுகிறதே... அதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் - “யார் என்ன வேண்டுமானாலும் கூறலாம். குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையை பார்க்கிறார்கள். நான் எதில் இருந்தும் மடைமாற மாட்டேன். உறுதியாக இருப்பேன். அது திமுகவுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

கலைஞரின் இறப்புக்கு கூட திமுக-வினர் அத்தனை ட்வீட் போடவில்லை போல.. என்னைப்பற்றி சின்ன சின்ன விஷயங்களை கூட அத்தனை டுவீட் போடுகிறார்கள். இதை பார்க்க என்டர்டைன்மெண்டாக இருக்கிறது போல”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com