உலக பிரசித்தி பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடந்த சரஸ்வதி பூஜை விழா!
செய்தியாளர்: மாதவன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைத்துள்ள கூத்தனூரில் கல்வி தெய்வம் சரஸ்வதி தேவிக்கு ஆலயம் அமைந்துள்ளது. தென் இந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கு தனியாக அமைந்துள்ள ஒரே கோவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு மிக்க இக்கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று காலை சரஸ்வதி தேவியின் பாத தரிசனம் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து வருகின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து அவர்களின் நோட்டு, புத்தகம் ,பேனா போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

