ஆயுத பூஜைமுகநூல்
தமிழ்நாடு
தமிழகத்தில் களைக்கட்டிய ஆயுதபூஜை; இரண்டு மடங்காக உயர்ந்த விலை!
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கடைவீதிகளில் அவல், பொரி உட்பட ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களின் விற்பனை, களைகட்டியது.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கடைவீதிகளில் அவல், பொரி உட்பட ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களின் விற்பனை, களைகட்டியது.
அதேசமயம், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில், பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
இருப்பினும் வழக்கத்தை விட பொதுமக்கள் அதிகமாகவே பூக்களையும், மாலைகளையும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.