“அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை...” மழைநீர் தேங்குவது குறித்து சந்தோஷ் நாராயணன் சாடல்

“தீர்வை எட்டுவதற்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். நியாயமற்ற எதிர்ப்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனால் இப்போது விஷயங்கள் மிக வித்தியாசமாக இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன்” - சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்pt web

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகள் இன்றும் நீரில் தத்தளிக்கின்றன. மக்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி தெற்கு ஆந்திரத்தின் பாபட்லா அருகே 100 கிலோமீட்டர் வேகத்தில் நேற்று கரையைக் கடந்துள்ளது.

சந்தோஷ் நாராயணன்
ஆந்திராவையும் புரட்டிப்போட்ட மிக்ஜாம் கரையைக் கடந்தது; நிலைமை என்ன?

நடிகர் விஷால் மழை தேங்குவது குறித்து தானே பேசி வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருந்தார். நடிகர் விஷ்னு விஷால் தங்களது பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாகவும் உதவிக்கு அழைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அஜித், அமீர் கான், விஷ்ணு விஷால்
அஜித், அமீர் கான், விஷ்ணு விஷால்ட்விட்டர்

விஷ்ணு விஷாலின் எக்ஸ் தள பதிவிற்கு பிறகு காரப்பாக்கம் விரைந்த மீட்பு படையினர், அங்கிருந்த விஷ்ணு விஷாலோடு பாலிவுட் நடிகர் அமீர்கானையும் மீட்டுள்ளனர். தன் தாயாரை சென்னை மருத்துவமனையில் சேர்த்திருக்கும் அமீர்கான், அருகிலிருந்து அவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் வெள்ளத்தில் அவரும் சிக்கிக்கொண்டுள்ளார். விஷ்னு விஷால் மற்றும் அமீர்கான் இருவரையும் மீட்ட தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பான இடத்திற்கு அவர்களை அழைத்துச்சென்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் கனமழை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், “10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 மணி நேரமாவது முழங்கால் அளவு தண்ணீர் நீடிப்பதும், மின்வெட்டும் ஏற்படுவதும் கடினமான உண்மை. இந்த வருட மழை புதிய வரையறைகளை அமைத்துள்ளது. அதிலும் வேடிக்கை என்னவென்றால், வரலாற்று ரீதியாக கொளப்பாக்கம் என்பது ஒரு ஏரியோ தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையில் மற்ற எந்தப் பகுதியையும் விட இங்கு ஏராளமான திறந்தவெளிகளும், குளங்களும் உள்ளன.

heavy rain
heavy rainpt desk

அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. அதனாலேயே ஒவ்வொரு முறையும் ஆறுபோல் எங்கள் குடியிருப்புகளை மழைநீர் தாக்குகிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவது அல்லது மருத்துவ எமர்ஜென்ஸியில் இருப்பது போன்றவை ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது. மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகும் சில பம்புகளும் நிரந்தரமாக உள்ளன. மக்களைத் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்.

எங்கும் நேர்மறையான நெகிழ்ச்சியான எண்ணங்களே சூழலே இருக்கின்றன. சென்னை மக்களின் ஆன்மாவிற்குப் பாராட்டுக்கள். தீர்வை எட்டுவதற்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். எனக்கு நியாயமற்ற எதிர்ப்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனால் இப்போது விஷயங்கள் மிக வித்தியாசமாக இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com