தேனி அமைச்சர் உதயநிதி பரப்புரை | கொடி ஊன்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

தேனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரசார வருகைக்காக, நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் திமுக கொடியை எடுத்து வந்ததோடு, அதை ஊன்றும் பணியிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக தேனி நகரின் முக்கிய சாலைகளில் திமுக கொடிகள் ஊன்றப்பட்டன.

அமைச்சர் உதயநிதி பங்கேற்ற தேனி திமுக பரப்புரை கூட்டம்
அமைச்சர் உதயநிதி பங்கேற்ற தேனி திமுக பரப்புரை கூட்டம்

இதில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் திமுக கொடியை எடுத்து வந்த தூய்மை பணியாளர்கள், அதை அங்கு அவர்களே ஊன்றும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி - திமுக கொடியை ஊன்றும் தூய்மை பணியாளர்கள்
உதயநிதி பரப்புரையில் பங்கேற்க வந்தவர்களுக்கு பணம் விநியோகம் - வசமாக சிக்கிய வீடியோ காட்சிகள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com