\
நகராட்சி ஆணையர் துர்கா
நகராட்சி ஆணையர் துர்காPT

திருத்துறைப்பூண்டி|குரூப் 2 தேர்வில் வெற்றி.. நகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற தூய்மை பணியாளரின் மகள்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்று கொண்ட துர்கா மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Published on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் மகள் துர்கா, இவர் தொடர் முயற்சிக்கு பிறகு குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார்.

நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றதற்கு பின் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நகராட்சி ஆணையர் துர்கா
நகராட்சி ஆணையர் துர்கா

தூய்மை பணியாளரான அவருடைய தந்தை மரணம் அடைந்த நிலையில், ஒரு தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக அதுவும் சொந்த மாவட்டத்தில் பொறுப்பேற்று இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி ஆணையர் துர்கா
தஞ்சாவூர் | பள்ளி மாணவர்களின் வாயில் சொல்லோ டேப் ஒட்டி கொடுமை.. தலைமை ஆசிரியர் மீது புகார்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com