\
தலைமை ஆசிரியர் மீது புகார்
தலைமை ஆசிரியர் மீது புகார்web

தஞ்சாவூர் | பள்ளி மாணவர்களின் வாயில் சொல்லோ டேப் ஒட்டி கொடுமை.. தலைமை ஆசிரியர் மீது புகார்!

ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டி புகைப்பட ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Published on: 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த கனிஷ் வர்மா. நிதிஷ், கவின், ரோஷன், சஷ்மிதா ஆகியோர் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் புனிதா ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி இரண்டு மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்ததாக கூறப்படுகிறது.

தலைமை ஆசிரியர் மீது புகார்
டெல்லி கணேஷ் மறைவு | “நகைச்சுவையை நுட்பமாகக் கையாள்பவர்; அவர் இடத்தை ஈடுசெய்வது எளிதல்ல” - கமல்ஹாசன்

எப்படி புகார் தெரியவந்தது?

கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. அதே பள்ளியில் பணியாற்றி வரும் மூன்றாம் வகுப்பு ஆசிரியை மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்டு இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து அவற்றை மாணவர்களின் பெற்றோர் செல்போனுக்கு அனுப்பி உள்ளார்.

புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றார்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்டு உள்ளனர். அதற்கு, உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் பேசிக் கொண்டு இருந்ததால் செல்லோ டேப் ஒட்டியதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் புகைப்பட ஆதாரத்துடன். தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புகாரை தொடர்ந்து பள்ளிகல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் மீது புகார்
ஸ்ரீபெரும்புதூர்: வடமாநில கர்ப்பிணிக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம்... தாய் சேய் நலம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com