"நீங்கள் இல்லை என்று கூறுகிறார்கள்; அதை எனது மனம் ஏற்க மறுக்கிறது" - சமுத்திரக்கனி உருக்கம்!

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமான நிலையில் இவரின் மறைவுக்கு நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தனது துயரை பகிர்ந்துள்ளார்.
சமுத்திரக்கனி
சமுத்திரக்கனிபுதிய தலைமுறை

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நல குறைவரால் காலாமானர் காலமான நிலையில் இவரின் மறைவுக்கு நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தனது துயரை பதிவு செய்துள்ளார்.

அதில், கேப்டன். நான் சமுத்திரக்கனி பேசுகிறேன். உங்களது மனதிற்குதான் ’நெறஞ்ச மனசு’ என்று தலைப்பு வைத்தேன். உங்களோடு பயணப்பட்ட அந்த 72 நாட்கள் மாபெரும் சக்தியோடு பயணபட்ட நாட்களாக பசுமையான நினைவுகளாய் இன்னும் மனதில் உள்ளது.

சமுத்திரக்கனி
“விமர்சனம் செய்ய முடியாத மனிதர் விஜயகாந்த்..” - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

இன்று நீங்கள் இல்லை என்று கூறுகிறார்கள். அதை எனது மனம் ஏற்க மறுக்கிறது.என்னுடைய கேப்டன் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருப்பார். அவரது ஆத்தும சாந்தி அடைய நான் இறைவனை பிராத்திக்கிறேன். எங்களுக்கு உள்ளே நீர் இருக்கிறீர் கேப்டன். உங்களது நல்ல எண்ணம், இந்த சமூகத்தின் மீது நீங்கள் கொண்ட பார்வை என்று எல்லாமே நான் நன்கு அறிவேன். அதை நாங்கள் பின்பற்றுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com