ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
ஆம்புலன்ஸ் ஊழியர்கள்pt desk

’நேர்மை’ | விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியர்கள்; 5.62 லட்சம் பணத்தை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

சேலத்தில் சாலை விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து ரூ. 5 லட்சத்து 62 ஆயிரம் பணத்தை கைப்பற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதனை பத்திரமாக குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
Published on

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலம் கொண்டாலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன், சிவதாரபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு பணியை முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தைவேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இதையடுத்து மீட்புப் பணிக்காக வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஆதிசேஷன் காயமடைந்து மயக்க நிலையில் இருந்தவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக காயமடைந்தவர்களையும் அவர்களின் உடைமைகளையும் மீட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
மதுரை | நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் வெட்டிக் கொலை – போதையில் ஆள் மாறி கொலையா?

இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து கைப்பற்றிய 5 லட்சத்து 62 ஆயிரத்து 660 ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை காவல்துறையினர் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பொறுப்புடன் நேர்மையாக கடமையாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியருக்கு காவல்துறையினர் மற்றும் அரசு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com