பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட உடல்
பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட உடல்pt desk

சேலம் | விவசாயி மரணத்தில் சந்தேகம் - பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட உடல்

ஓமலூர் அருகே விவசாயி இறப்பில் எழுந்த சந்தேகத்தால், 7 நாளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
Published on

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டி, மாரகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் பாலு (62). விவசாயியான இவர், கடந்த 31-ம் தேதி வீட்டருகே சாலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து வழக்கமான சடங்கு செய்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 2 நாட்கள் கழித்து, எனது தந்தை டிராக்டர் மோதி இறந்ததாக பாலுவின் மகன் சுரேஷ், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்தப் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட உடல்
வேலூர் | ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது

இதைத் தொடர்ந்து பாலு உடலை தோண்டி எடுத்து, காடையாம்பட்டி தாசில்தார் மனோகரன் முன்னிலையில், அரசு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். பாலு விபத்தில் இறந்தாரா, இயற்கையாக இறந்தாரா என்பது மருத்துவ அறிக்கையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com