சேலம்: கனமழை காரணமாக இடிந்து விழுந்த வீடு – தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு

சேலத்தில் கடந்த நாட்களாக பெய்த கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Tragedy
Tragedypt desk

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பிற்பகல் நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாள்தோறும் பெய்யும் மழை காரணமாக ஒரு சில இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

House collapsed
House collapsedpt desk

இந்த நிலையில், அன்னதானப்பட்டி கண்ணகி தெருவில் வீடு ஒன்று இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி மாது என்பவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tragedy
சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி சிறுமியின் தாய் வழக்கு!

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்கு வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com