சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி சிறுமியின் தாய் வழக்கு!

யூட்யூப்பர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளார்.
savukku Shankar
savukku Shankarpt

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

புகார் அளித்த பின் செய்தியாளரிடம் பேசிய அவர், “எனது மகள் இறந்த வழக்கில் சவுக்கு சங்கர் அவதூறு பரப்பினார். பள்ளி நிர்வாகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு பேசினார்” எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

செல்வி பேசுகையில், “யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்துள்ளேன். எனது மகள் பள்ளிக்கூடத்தில் கொலை செய்யப்பட்டார். அந்தப்பள்ளியில் வெளிநாட்டு ஆணுறைகள் இருந்துள்ளன. ஆகவே எனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் தற்போது வரை போக்சோ வழக்கு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்ப்படவில்லை. இந்த சம்பவத்தில் Youtuber சங்கர் என்பவர் என் மகள் மீது அபாண்டமாக பழி சுமத்தி இருந்தார்.

savukku Shankar
“பெண் காவலர்கள் என்னை தாக்கினார்கள்” - திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு!

கல்வி நிறுவன நிர்வாகிகள் சாந்தி, சிவசங்கரன், ரவிக்குமார் ஆகியோரிடம் யூட்யூபர் சவுக்கு சங்கர் பணம் வாங்கிக்கொண்டு என் மகள் குறித்து அவதூறு பரப்பினார். எனது மகள் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்ததாகவும் அதனால்தான் சாதி பார்த்து பிரச்னை செய்ததாகவும் சவுக்கு சங்கர் அவதூறு பரப்பியுள்ளார். ஆகவே அவர்மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து அவரது வழக்கறிஞர் மோகன் பேசுகையில் “புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com