உடும்புகளை வேட்டையாடிய தந்தை மகன் கைது
உடும்புகளை வேட்டையாடிய தந்தை மகன் கைதுpt desk

சேலம் | வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடியதாக தந்தை மகன் கைது

ஓமலூர் அருகே வனத்தில் உடும்புகளை வேட்டையாடிய தந்தை, மகனை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published on

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூர் தேக்கம்பட்டியில் உள்ள வட்டக்காடு வனத்தில் அறிய வகை விலங்குகள் உள்ளன. இவற்றை பாதுகாக்க சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, என்.எஸ்.தோட்டம் அருகே 2 பேர், வளர்ப்பு நாயைக் கொண்டு உடும்புகளை வேட்டையாடியதைப் பார்த்தனர்.

arrest
arrestPT DESK
உடும்புகளை வேட்டையாடிய தந்தை மகன் கைது
சென்னை | சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் - இருவர் கைது

இதையடுத்து அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த காத்தான், அவரது மகன் அருள்குமார் என்பது தெரியவந்தது. அவர்களை உடும்புகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த வன அதிகாரிகள், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com