1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் - இருவர் கைது
1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் - இருவர் கைது pt desk

சென்னை | சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் - இருவர் கைது

சென்னை நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டதில் 1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: நாராயணசாமி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையை நோக்கி அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரை நிறுத்தி சோதனையிட்டனர் அப்போது காரில் 1 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் - இருவர் கைது
சென்னை | குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்க போலி ஆவணங்களை கொடுத்ததாக இருவர் கைது

இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பேருஷா (27), அட்மத்சிங் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் பெங்களூருவில் தங்கி சென்னை தாம்பரத்திற்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. உடனடியாக 1 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com