couple deathpt desk
தமிழ்நாடு
சேலம்: பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு நேர்ந்த துயரம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உறவினரின் திருமணத்திற்கு சென்ற தம்பதியர் தனியார் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலத்தில் மோகன்ராஜ் என்பவர் அவரது மனைவி விமலா ராணியுடன் தங்களது உறவினரின் திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கொத்தம்பாடி பகுதி பேருந்து நிறுத்தம் அருகே தம்பதியர் செல்லும்போது, சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Road accidentpt desk
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த தம்பதியரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வரும் நிலையில், அப்பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.