சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி

வெற்றி துரைசாமி குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி அளிக்கப்படும் என்று அவரது தந்தை சைதை துரைசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
வெற்றி துரைசாமி விபத்து
வெற்றி துரைசாமி விபத்துமுகநூல்

இமாச்சலப் பிரதேசத்தில், சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், அவரை தேடும் பணியில் அம்மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 வெற்றி துரைசாமி
வெற்றி துரைசாமி

சுற்றுலாவிற்காக இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்த வெற்றி துரைசாமியின் கார், சட்லஜ் ஆற்றில் விழுந்து நேற்று முன்தினம் விபத்துள்ளானது. இதுகுறித்து நேற்று முன்தினம் மாலை தமிழ்நாடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெற்றி துரைசாமி விபத்து
இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்து - சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் நிலை என்ன?

வெற்றி துரைசாமியின் நிலை மட்டும் அறியப்படாமலேயே உள்ளது. இதனால் காணாமல் போன தனது மகன் வெற்றி துரைசாமி குறித்த தகவலை தெரிவிப்பவருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று சைதை துரைசாமி வேதனையுடன் இன்று அறிவித்துள்ளார்.

இவரை தேடும் பணியில் அம்மாநில போலீசார் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இமாச்சல் பிரதேசத்தில் நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக வெற்றி துரைசாமியை கண்டறிய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. சட்லஜ் நதி உறைந்திருப்பதால் இந்த சூழல் உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதி அருகே வசிக்கும் பழங்குடியின மக்களிடமும் தகவல் தெரிவிக்க காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com