இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்து - சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் நிலை என்ன?

இமாச்சலப் பிரதேசத்தில், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது.
சைதை துரைசாமி மகனின் கார் விபத்து
சைதை துரைசாமி மகனின் கார் விபத்துபுதிய தலைமுறை

இமாச்சலப் பிரதேசத்தில், சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், அவரை தேடும் பணியில் அம்மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 வெற்றி துரைசாமி
வெற்றி துரைசாமி

இமாச்சலப்பிரதேசம் கஷாங் பகுதியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர் கோபிநாத் சென்று கொண்டிருந்த கார் தீடீரென மலையில் இருந்து சட்லெஜ் நதியில் விழுந்தது. இதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

சைதை துரைசாமி மகனின் கார் விபத்து
Casagrand தலைமை அலுவலகம் பொதுமக்களால் முற்றுகை.. என்ன காரணம்?

நேற்று மாலையில் அரங்கேறியுள்ள இவ்விபத்து தொடர்பாக தமிழக காவல்துறைக்கு இமாச்சல காவல்துறையினர் தற்போது தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், காரில் பயணித்த வெற்றி துரைசாமி குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேற்கொண்டு அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

விபத்துள்ளான காரை ஓட்டிய ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்த தகவல்களையும் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து பெற்று வருகின்றனர். மலையில் இருந்த கார் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com