ஆ.இரா.வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!
வ.உ.சி குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, அதை நூலாக எழுதி வெளியிட்டு வருகிறார் ஆ.இரா.வெங்கடாசலபதி. இவருடைய 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்கிற நூலுக்காக 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பற்றிய ஆய்வில் மூழ்கி புத்தகத்தை வேங்கடாசலபதி எழுதியுள்ளார்.
இச்சூழலில், அவரது திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கலகம் என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டத்தை எழுச்சி என பதிவு செய்துள்ள வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு வாழ்த்துகள்.” என பாராட்டு தெரிவித்துள்ளார்.