ஆர்எஸ்.பாரதி
ஆர்எஸ்.பாரதிpt desk

அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட புடுங்க முடியாது – அண்ணாமலைக்கு RS பாரதி பதில்

அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட புடுங்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: முருகேசன்

சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ் பாரதி கூறுகையில்.... பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலாக உருவும் வரை போகமாட்டேன் என பேசி இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது என்று தெரிவித்தார்.

Annamalai
Annamalaipt web

மேலும் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் பொய் பேசுவதாக அண்ணாமலை தெரிவித்த நிலையில், இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, ஒரே மேடையில் நேரடியாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் காவி ஆட்சி மலர்ந்தே தீரும் என்பது ஒரு கற்பனையானது. முதலமைச்சர் செல்லும் வழியில் வெடிகுண்டு மிரட்டல் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் தனது வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தவர், எதையும் சந்திக்கும் ஆற்றல், திறமை அவருக்கு உண்டு.

ஆர்எஸ்.பாரதி
கான்கிரீட் நுழைவுவாயிலை அகற்றியபோது ஏற்பட்ட பயங்கர விபத்து... உயிரிழந்த ஓட்டுநர்!

அதிமுக போராட்டம் குறித்த கேள்விக்கு, அதிமுகவை பற்றி கேள்வி கேட்க வேண்டாம். அவர்களே நெருக்கடியில் உள்ளனர். மேலும் அவர்களைப் பற்றி விமர்சிக்க விரும்பம் இல்லை ஒன்றிய அரசின் திட்டங்களை நாங்கள் காப்பியடிக்க வில்லை என்பதோடு, ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்று உங்களுக்கே தெரியும்.

prashant kishor - tvk leader vijay
prashant kishor - tvk leader vijayweb
ஆர்எஸ்.பாரதி
மேடையில் ஒலித்த ஜெயலலிதா குரல்.. ஒரு நிமிடம் அதிர்ந்த கூட்டம்.. ஆதாரம் காட்டிய செங்கோட்டையன்!

தவெக தலைவர் விஜய் கட்சிக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்கு இருப்பது என்ற கேள்விக்கு, அது பற்றி நான் கருத்து கூற விருப்பம் இல்லை. பிரசாந்த் கிஷோர் சொந்த மாநிலத்திலேயே டெபாசிட் வாங்காதவர் என்று ஆர்.எஸ் .பாரதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com