policept desk
தமிழ்நாடு
திருவாரூர்: காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை - பிரபல ரவுடி கைது
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
திருவாரூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி உத்தரவின் பேரில் தனிப்படையினர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில், திருவாரூர் அமமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டனின் சகோதரர் அரவிந்த் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது அணியினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
policept desk
இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரவுடி அரவிந்த் A+ ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.