விஜய், நயினார் நாகேந்திரன்
விஜய், நயினார் நாகேந்திரன்web

’அநாகரீகமான பேச்சு’.. நயினார் நாகேந்திரனுக்கு திருமா, கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

தவெக தலைவர் விஜய் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான கண்டனங்கள் தீவிரமடைந்துள்ளன.
Published on
Summary

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை நடிகையுடன் ஒப்பிட்டு பேசியது அரசியல் தலைவர்களின் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன், கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் நயினாரின் பேச்சை அநாகரீகமாகக் கண்டித்து, பொறுப்பற்ற முறையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் எதிர்கட்சிகளை விமர்சித்து கடுமையாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் தான், விஜயின் விமர்சனம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை நடிகையுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருமாவளவன்
திருமாவளவன்pt web

அரசியலில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நயினார் பொறுப்பற்ற முறையில் பேசியதாக கண்டனங்கள் எழக்கூடிய நிலையில், அவரின் பேச்சுக்கு தவெக, திமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்தான எதிர்வினைகளைப் பார்க்கலாம்.

விசிக தலைவர் திருமாவளவன், ”பா.ஜ.க மாநில தலைவர் நடிகை குறித்து பேசியது ஏற்புடையதல்ல. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் ஏன் இதுபோன்று பேசினார் என்று தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் இதுகுறித்துப் பேசியபோது, ”அரசியல் கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பொது வெளியில் அநாகரீகமாக பேசுவது ஏற்புடையதல்ல. மேலும், விஜய் குறித்து விமர்சிக்க பல விஷயம் இருக்கிறது. எனவே யாராக இருந்தாலும் கவனமாக பேச வேண்டும்” என தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

விஜய், நயினார் நாகேந்திரன்
”திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்; நான் ஆணவத்தில் கூறவில்லை” - முதல்வர் ஸ்டாலின்!

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ”நயினார் நாகேந்திரன் ஒரு பண்பாளர். அவர் அப்படி பேசியதை எதிர் பார்க்கவில்லை. அவ்வாறு, பேசி இருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்திருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், பொதுவெளியில் பயணிக்கும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசுவது அழகல்ல. பெண்களை கண்ணியத்துடன் நடத்துவதே நாகரீக அரசியல் எனத் தெரிவித்திருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்x

மேலும், திமுக எம்.பி. கனிமொழி சோமு, அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் விமர்சனம் செய்வது அநாகரிகம்.

அதிலும், அரசியலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் மாண்பையும் கண்ணியத்தையும் இழித்துப் பேசுவது பெண்மையை களங்கப்படுத்தும் செயல். நயினார் நாகேந்திரனை பாஜகவில் உள்ள பெண் தலைவர்களே கண்டிக்காமல் மவுனம் காப்பது அநீதி” என கண்டனம் தெரிவித்தார்.

இவ்வாறு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜயை நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பதை அரசியல் கட்சித் தலைவர் உட்பட பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தி.நகர் உள்ள கமலாலயத்திற்கு காலை நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அப்போது, அவரிடம் இந்த விவாதம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். அப்போது பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து கமலாலயத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அதேபோல தமிழிசையிடமும் இதுகுறித்த கேள்வி கேட்கப்பட்டது, அவரும் எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார்.

விஜய், நயினார் நாகேந்திரன்
‘நயினார் அடிப்படை அறிவைக்கூட இழந்துவிட்டார்..’ விஜயை மோசமாக விமர்சித்ததற்கு நாஞ்சில் பதிலடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com