சென்னை | கல்லூரி வளாகத்தில் இரு தரப்பு மாணவர்கள் இடையே பயங்கர மோதல் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இரு தரப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு கத்தி வெட்டு விழுந்தது.
சென்னை
சென்னைமுகநூல்

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இரு தரப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு கத்தி வெட்டு விழுந்தது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பு மாணவரை கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. மாணவரின் அலறல் சத்தம் கேட்டு கல்லூரி ஊழியர்கள் வந்தவுடன் மோதலில் ஈடுபட்டோர் தப்பியோடி விட்டனர்.

மோதலில் காயமடைந்த மாணவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாகக் கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை
திண்டுக்கல்: சாலையோரம் சடலமாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை – வீசிச் சென்றது யார்? என விசாரணை

முதற்கட்ட விசாரணையில், பி.ஏ. 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், "ரூட் தல" பிரச்னையில் மோதல் நடந்திருப்பதும், 15g மற்றும் 53 ரூட் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோத மோதல் என்பதும் தெரிய வந்துள்ளது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களைக் கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com