ஆர்.என்.ரவிமுகநூல்
தமிழ்நாடு
பெண்கள் பாதுகாப்பு: தமிழகத்தை புகழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை கொண்டாடும் விதமாக, சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை கொண்டாடும் விதமாக, சென்னை ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மணிப்பூர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக தான் பார்ப்பது ஆங்கிலேயர்கள் மக்கள் மனத்தில் விதைத்த விஷ விதைகள்தான் என்று தெரிவித்தார்.
அவர்கள்தான் மக்களை பழங்குடியினர், கிராம வாசிகள் என பிரித்ததாக ஆளுநர் குற்றம்சாட்டினர். விருந்தோம்பலில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் தமிழ் மொழி மற்றும் கலாசாரம் மிக சிறந்த ஒன்று என்றும் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.