
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நடந்த அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஆர்.கே.நகர் வேட்பாளராக டிடிவி தினகரன் தேர்வானார். இதனை அதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் செங்கோட்டையன் அறிவித்தார். ஆர்.கே.,நகரில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்.கே.,நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.