\
ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நேரடி ஒளிப்பரப்பு: தேர்தல் அதிகாரி தகவல்

ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நேரடி ஒளிப்பரப்பு: தேர்தல் அதிகாரி தகவல்

ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நேரடி ஒளிப்பரப்பு: தேர்தல் அதிகாரி தகவல்
Published on

முறைகேடுகளை தடுக்க இணையதளத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குபதிவு நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும் என தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் பேட்டி அதிக நேரத்திற்கு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபட்டால் அது தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் எனவும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது தடுக்கப்படும் எனவும் கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பவர்களை கண்டறிய தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2ஆம் கட்ட பயிற்சி நாளை நடைப்பெறும். தேர்தல் தொடர்பாக வந்த 145 புகார்களில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கார்த்திகேயன் கூறினார்.

வாக்களார்களுக்கு பணம் கொடுக்கும் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com