பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள்!

பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதுகுறித்த தொகுப்பை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

திருச்சிக்கு இன்று (ஜனவரி 2) வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். பின்னர், புதிய சர்வதேச விமான முனையத்தை துவக்கிவைத்தார். இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதன் விவரம் வருமாறு:

1) சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை 'கடுமையான இயற்கைப் பேரிடர்கள்' என அறிவித்து NDRF-ல் இருந்து உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும்

2) சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, வேலூர் விமான நிலைய விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

3) மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்

4) சென்னை-பினாங்கு, சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கிட வேண்டும்

5) சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பினை விரைந்து வழங்கிட வேண்டும்

6) தமிழ்நாட்டில் NHAI செயல்படுத்தி வரும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்

7) இருவழிச் சாலையாக மாற்றப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

8) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த MSME நிறுவனங்களுக்கு BHEL நிறுவனம் அதிக அளவில் Procurement orders வழங்க வேண்டும்

மேலும் இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கவும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com