மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் கொடுக்கும் சட்டமுன்வடிவு; தாக்கல் செய்த முதல்வர்!
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் சட்டமுன்வடிவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக சட்டசபையில் இன்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அந்தவகையில் இன்று மிக முக்கியமான இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதுகுறித்து அவர் பேசுகையில், " எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரலாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஒலிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் . 4 ஆண்டுகளில் இதுதான் டாப் என அரசுக்கு பாராட்டுகள் வந்திருக்கிறது . உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவர்." என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்நிலையில் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.