துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்...? வெளியான தகவல்கள் சொல்வதென்ன?

ஜனவரி 21ல் நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பின் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதிபுதிய தலைமுறை

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் 35-வது நபராக பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்pt desk

அடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படும் என பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தவண்ணம் இருந்தனர். சமீபத்தில் கூட இதுபோன்ற தகவல்கள் வந்த நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் கருத்து தெரிவித்திருந்த உதயநிதி, இது வதந்தி என்று குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் உதயநிதி
பிரதமருடன் சந்திப்பு.. திமுகவில் உதயநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்.. துணை முதல்வர் ஆகிறாரா?

இத்தகைய சூழலில் உதயநிதிக்கு துணை முதலமைல்வர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 21ல் நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பின், ஜனவரி 28-ல் முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும் முன் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இத்தகைய முன்னெடுப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதிபுதிய தலைமுறை

உதயநிதிக்கு கூடுதலாக சில துறைகளும் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையுடன் சேர்த்து சிறப்பு திட்ட செயலாக்கத்துறையும் அவர் வசம் உள்ளது. இந்நிலையில் முதல்வர் வசம் இருக்கும் சில துறைகள் அவருக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com