\
rain
rain web

மேகமூட்டத்துடன் காணப்படும் வானம்.. 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெயில் வாட்டம் குறைய, இன்று 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on
Summary

தமிழகத்தில் கடந்த நாட்களாக வாட்டிய வெயில் குறைந்து, பலத்த காற்றுடன் மிதமான சூழல் நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் முதல் குமரிக்கடல் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மே 23 அன்று 10 மாவட்டங்களிலும், மே 24 அன்று 19 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில்‌ கடந்த சில நாள்களாக வெயில்‌ வாட்டி வதைத்த நிலையில்‌ இன்று பலத்த காற்று வீசியது. வெப்பம்‌ குறைந்து மிதமான சூழல்‌ நிலவி வருகிறது.

இந்நிலையில் மே 23ஆம் தேதி 10 மாவட்டங்களிலும்‌, மே 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19 மாவட்டங்களிலும்‌ பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது.

rain
rain web

தென்கிழக்கு அரபிக்கடலில்‌ நிலவும்‌ வளிமண்டல சுழற்‌சியிலிருந்து குமரிக்கடல்‌ வரை, கேரளம்‌ மற்றும்‌ தென்‌ தமிழக பகுதிகள்‌ வழியாக வளிமண்டல காற்றழுத்தத்‌ தாழ்வுப்‌ பாதை நிலவுவதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல்‌, நீலகிரி, ஈரோடு, சேலம்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ஆகிய மாவட்டங்களிலும்‌ பலத்த காற்றுடன்‌ கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மே 24 முதல்‌ மே 26 வரை தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின்‌ 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ சென்னை, கடலூர்‌, செங்கல்பட்டு, தருமபுரி, காஞ்சிபுரம்‌, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌பாண்டிச்சேரியில்‌ சில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain
டிஜிட்டல் யுகத்தில் தவெக அமைச்சர்கள்.. கோப்புகள் நகருமா? ரீல்ஸ் தொடருமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com