\
other ministers inspecting police stations operating under CM Vijay
other ministers inspecting police stations operating under CM VijayYoutube

முதல்வரின் துறையில் திடீர் ஆய்வு: அமைச்சரின் செயலால் அதிர்ச்சி|அதிகார விதிமீறல் என Ex DGP விமர்சனம்!

முதல்வர் விஜயின் கீழ் செயல்பட்டு வரும் காவல் நிலையங்களில் பிற துறை அமைச்சர்கள் ஆய்வு செய்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது அதிகார விதிமீறல் என விமர்சனம் எழுந்துள்ளது.
Published on: 
Summary

தமிழ்நாட்டில் காவல்நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வுசெய்வது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. தக்கோலம் காவல் நிலையத்தில் அமைச்சர் காந்திராஜ் விதிமீறலாக நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் டி.ஜி.பி ரவி இதை கடுமையாக விமர்சித்து, காவல்துறையின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை நீண்ட ஆண்டுகாலமாக முதலமைச்சராக இருப்பவரின் வசமே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது காவல்துறை முதலமைச்சர் விஜயின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்துக்கு இரவு நேரத்தில் ஆய்வுக்காக சென்றுள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து சினிமா பாடல்களுடன் ரீல்ஸ்ஸாக சமூக வலைத்தளத்திலும் தவெகவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் ஆய்வு என்ற பெயரில் அமைச்சர் காவலர்களை நிற்கவைத்தும், பெண் காவலரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்புவதும், காவல்துறையின் ஆவணங்களை பார்ப்பதுமான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது. அதே போல சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

முதலமைச்சரின் துறையின் கீழ் வரும் காவல் நிலையத்தில் வேறு துறையை சேர்ந்த அமைச்சர்கள் ஆய்வு செய்வது விதிமீறல் என்று விமர்சனம் எழுந்துள்ளது. திமுக எம்.பி கனிமொழி, அதிமுக எம்.பி இன்பதுரை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி ரவி அமைச்சர்களின் இந்த செயலை அத்துமீறல் என்று விமர்சித்துள்ளார். மேலும் யாரெல்லாம் காவல்நிலையங்களில் ஆய்வு செய்யலாம் என்றும் பல்வேறு தகவல்களை புதிய தலைமுறைக்கு பகிர்ந்துள்ளார். அதில் அமைச்சர்கள் செய்தது விதிமீறல் என அவர் விமர்சித்துள்ளார்.

other ministers inspecting police stations operating under CM Vijay
இந்​தி​யர்​களுக்கு விசா விலக்கு ரத்து : மலேசியா போய் இப்படியா செய்வார்கள்... காரணம் என்ன ?