பரவும் எலிக் காய்ச்சல்? | உசிலம்பட்டி அருகே 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எலிக் காய்ச்சல்
எலிக் காய்ச்சல்முகநூல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த காய்ச்சலால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எலிக் காய்ச்சல்
இந்த அறிகுறிகள் உடலில் வந்தால் உதாசீனம் செய்யாதீர்கள்; புற்றுநோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com