Police stationpt desk
தமிழ்நாடு
ராசிபுரம்: ஏரி அருகே பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - போலீசார் விசாரணை
ராசிபுரம் அருகே ஏரியின் அருகே 40 வயது மதிப்புத்தக்க பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு. கொலை செய்து எரிக்கப்பட்டரா என ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி ஏரியின் அருகே 40 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர், உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்pt desk
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்து எரிக்கப்பட்டாரா அல்லது அப்பெண்ணே தீ வைத்துக் கொண்டாரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.