காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சுpt desk

ராணிப்பேட்டை: சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – எஸ்.பி நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு. 10 பேரிடம் போலீசார் விசாரணை, நேரில் எஸ்.பி ஆய்வு மேற்கொண்டார்.
Published on

செய்தியாளர்: ச.குமரவேல்

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால் அதன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு விழுந்துள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

எஸ்.பி நேரில்  ஆய்வு
எஸ்.பி நேரில் ஆய்வுpt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
ஈரோடு | நாதக Vs தந்தை பெரியார் திராவிடர் கழகம் இடையே பயங்கர மோதல்.. நடந்தது என்ன?

மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர் பழைய குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com