ஈரோடுபுதிய தலைமுறை
தமிழ்நாடு
ஈரோடு | நாதக Vs தந்தை பெரியார் திராவிடர் கழகம் இடையே பயங்கர மோதல்.. நடந்தது என்ன?
ஈரோட்டில், “பெரியாரை இழிவாகப் பேசியவர்களை புறக்கணிப்போம்” என்ற துண்டு பிரசுரங்களை வழங்கிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் தாக்கினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள தேவாலயம் முன் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டனர். பெரியார் ஈரோட்டிற்கு செய்த திட்டங்கள் குறித்தும், பெரியாரை இழிவாக பேசியவர்களை புறக்கணிப்போம் என்ற வாசகங்களுடனும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினரை தாக்கி, துண்டு பிரசுரங்களைக் கிழித்தனர். இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் தபெதிகவினரை மீட்டு அப்புறப்படுத்தினர். இதுகுறித்து முழுத் தகவல்களையும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.