ஆணழகன் போட்டிpt desk
தமிழ்நாடு
’மிஸ்டர் ராம்நாடு’ | நாங்களும் 'BODY BUILDER' தான் - ஆணழகன், போட்டியில் அதகளப்படுத்திய சிறுவர்கள்!
தொண்டியில் மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது இதில், கலந்து கொண்ட சிறுவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் 21ஆவது மிஸ்டர் ராம்நாடு போட்டி நடைபெற்றது இந்த போட்டியை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மாவட்ட அலுவலர் தினேஷ்குமார் துவக்கி வைத்தனர்.
ஆணழகன் போட்டிpt desk
இந்நிலையில், 10 வயதிற்கு உள்ளானவர்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்கள் தங்களது உடல் திறமையை காட்டியது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெடல் சான்றிதழ் மற்றம் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து 17 வயதிற்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது. அதில், 10 பேர் கலந்து கொண்ட நிலையில், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.