Govt buspt desk
தமிழ்நாடு
திண்டுக்கல் | கூட்ட நெரிசலால் ஒரு பக்கம் சாய்ந்தபடி செல்லும் அரசு பேருந்து – அச்சத்தில் பயணிகள்!
வேடசந்தூர் அருகே கூட்ட நெரிசலால் ஒரு பக்கம் சாய்ந்தபடி அரசு பேருந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர்: காளிராஜன்.த
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குருந்தம்பட்டியில் இருந்து திண்டுக்கல்லிற்கு அரசு பேருந்து சென்றது. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பயணம் செய்தனர். பேருந்திற்குள் இடம் இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
Govt buspt desk
இதனால், அரசு பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்தபடி, சாலையில் உரசுவது போல் சென்றது. இதனை அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அரசு வழங்கிய நிவாரணநிதியில் இருந்து EMI-யை வசூலிப்பதா? வங்கிக்கு எதிராக வயநாட்டில் வெடித்த போராட்டம்
இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.