இதுவரை யாரும் அறியா வரலாறு! ராஜேந்திர சோழனால் கிடைத்த பெருமை; தோண்டத்தோண்ட அற்புத தகவல்கள்
விண்ணை முட்டும் பெருமைகளை கொண்ட கங்கை கொண்ட சோழபுரத்தின் அருகாமையில அமைந்திருக்கும் பல கிராமங்கள் மிகவும் சுவாரஸ்யமான பெயர்களை தாங்கி நிற்கின்றன..
வழக்காறு நடைமுறையில் உள்ள காரண பெயர்களுக்கு, அந்தந்த ஊர் மக்கள் வியக்க வைக்கும் காரணங்களை பகிர்கின்றனர். குறிப்பாக, படைநிலை, மீன்சுருட்டி, காடுவெட்டி, மெய்காவல்புதூர், யுத்தப்பள்ளம் என்று பல்வேறு காரணப் பெயர்களோடு, சோழர்களின் ஆழமான வரலாற்றையும் தாங்கி நிற்கின்றன இந்த கிராமங்கள்.
சோழ மன்னர்கள் வருகையின்போது காடுகளை அழித்துவிட்டு அப்பகுதியில் படைகளை நிறுத்தியதால் அது படைநிலை என்று பெயர் பெற்றதாகவும், சோழ மன்னர்கள் தங்கி இருந்தது என்று முன்னோர்களால் தெரிந்துகொண்டபோது பெருமைதான் என்று நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அதேபோல, மெய்க்காவல்புதூர் என்ற ஊர் குறித்து விசாரிக்கையில், ராஜேந்திர சோழனின் மெய்க்காவலர்கள் தங்கி இருந்த காரணத்தால், இந்த ஊருக்கு மெய்க்காவல்புதூர் என்று பெயர் வந்ததாகவும், கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா கொண்டாடப்படுவது பெருமையாக இருப்பதாகவும் விளக்குகின்றனர். (females byte)
குறிப்பாக, யுத்தப்பள்ளம் என்ற ஊர் குறித்து கேட்கும்போது, ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் இந்த ஊரில்தான் யுத்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் காரணமாகவே ஊருக்கு பெயர் யுத்தப்பள்ளம் என்று அமைந்ததாகவும் சிலாகித்து பேசுகின்றனர். (yuththappallam byte)
மேற்குறிப்பிட்ட இந்த ஊர்கள் மட்டுமல்லாமல், உட்கோட்டை, மாளிகை மேடு, கடாரம் கொண்டான், சோழவரம், வீரசோழபுரம், ஆயுதகலம், சுண்ணாம்பு குழி என்று பல்வேறு ஊர்களும் இந்த பகுதியில் அமைந்துள்ளன.