ஓ.பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பா
ஓ.பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பாpt web

“ஓபிஎஸ் அமைதியாக இருந்தால் இபிஎஸ்ஸிடம் நாங்கள் பேசுகிறோம்.. கோர்ட் போக வேண்டாம்” - ராஜன் செல்லப்பா

அதிமுகவில் இணைய விரும்பும் ஓபிஎஸ் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் வழக்கு உள்ளிட்ட எந்த வித இடையூறும் ஏற்படுத்த கூடாது எனவும் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
Published on

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணை பரப்புரை நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கலந்துகொண்டார். நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் எவ்வித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய விரும்புவதாக ஓபிஎஸ் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய ராஜன் செல்லப்பா, “அதிமுகவிற்கு வலிமையான எதிர்காலம் 2026ஆம் ஆண்டு உள்ளது. அதிமுக இரட்டை தலைமையாக இருந்த போதும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஒற்றை தலைமையில் புதிய உச்சத்தை தொட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வகையில் தங்களுடைய பயணங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.

6 மாதம் பொறுமையாக இருங்கள் - ராஜன் செல்லப்பா
6 மாதம் பொறுமையாக இருங்கள் - ராஜன் செல்லப்பா

அவருடைய செல்வாக்கு நன்றாக இருந்திருக்குமானால் பாஜகவே அவரைக் கட்சியில் இணைத்திருக்கும். தற்போது செல்வாக்கை இழந்துள்ள ஓபிஎஸ் ஆறு மாத காலம் அதிமுகவிற்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து தாங்கள் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை ஓபிஎஸ் போன்றோர் தொடர்ந்து அதிமுகவுக்கு இழைத்து வருகின்றனர். அதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. மூத்த உறுப்பினர்கள் இதுபோன்று செயல்படுவது அழகல்ல.

ஓ.பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பா
சாதிவாரி கணக்கெடுப்பு | அன்புமணி போடும் கணக்கு என்ன? அரசு ஏன் தயங்குகிறது? - விளக்குகிறார் அய்யநாதன்

மூத்த அமைச்சர் செங்கோட்டையன், ஏற்ற இறக்கங்கள் நன்றாக புரிந்து கொண்டவர். அதிமுகவிற்கு சிறு இழுக்கு வந்தால் கூட பொறுக்க மாட்டார். மிகச்சிறப்பாக பணியாற்றியவர். அதிமுகவிற்கு வெற்றியை தேடி தருவதில் அங்கமாக இருப்பார். அவர் மரியாதை காரணமாக பொது செயலாளர் என மேடையில் வார்த்தையை பயன்படுத்தி இருகிக்கிறார். இது தவறு அல்ல” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com