madurai train accidentpt web
தமிழ்நாடு
“அவ்ளோ பெரிய சிலிண்டரை எப்படி ரயிலில் ஏற்ற அனுமதிச்சாங்க; முதல் குற்றவாளி அவங்கதான்”
“குற்றத்தை செய்துவிட்டு இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுப்பது நியாயமா” என ரயில் பயணிகள் சங்கம் மாரிமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணிகள் சிலர் தேநீர் தயாரிக்க கேஸ் சிலிண்டரை பற்றவைத்த போது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதியதலைமுறையின் சார்பாக ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை நேர்காணல் செய்தோம். அவர் பேசியவை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.