'ரயில் சேவா புரஸ்கார்'
'ரயில் சேவா புரஸ்கார்'pt desk

மதுரை ரயில்வே கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு 'ரயில் சேவா புரஸ்கார்' விருது

மதுரை ரயில்வே கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு 'ரயில் சேவா புரஸ்கார்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: மருதுபாண்டி

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே ஊழியர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ரயில்வேயில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றும் 100 சிறந்த பணியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஹஅதி விஷிஷ்ட் ரெயில் சேவா புரஸ்கார்' என்னும் விருதை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பணியாற்றும் சுமார் 26 பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்

'ரயில் சேவா புரஸ்கார்'
’மனுஷி’ | ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எவை? விளக்கம் கேட்டு தணிக்கை வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

தெற்கு ரயில்வேயின் மதுரை பிரிவு 69வது ரயில் வாரத்தை முன்னிட்டு மதுரை ரயில் கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்வில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் (டிஆர்எம்) சரத் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராகக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கினார், மேலும் சிறந்த சேவை மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் மதிப்புமிக்க 'ரயில் சேவா புரஸ்கார்' 26 சிறந்த ஊழியர்களுக்கு வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com