திமுக - அதிமுகவின் ரகசிய திட்டம்.. குலைத்த ராகுல்.. அரியணை ஏறிய விஜய்.. நடந்தது என்ன?
விஜய் முதல்வராதைத் தடுக்கும் விதமாக இருந்த பல முட்டுக்கட்டைகளை ராகுல் காந்தி உடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைமை மூலம் கேரள முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலி குட்டி, இடதுசாரிகளிடம் பேசி இந்த முயற்சியை தடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தவெக, தனித்து வந்தபோதும், அவருக்குப் பெரும்பான்மை கிடைக்காததால், பிற கட்சிகளின் ஆதரவை நாடினார். அப்போது முன்கூட்டியே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அக்கூட்டணியை முறித்துக்கொண்டு போய் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கிடையே, விஜயை முதல்வராக்கக் கூடாது என்கிற நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து அமைச்சரவை அமைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பேசப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், பழனிசாமி முதல்வர் எனும் முன்மொழிவை இடதுசாரிகள் நிராகரித்துள்ளன.
மேலும், திமுக - அதிமுக இணைந்தால், மக்கள் மத்தியில் அதிருப்தியாகும் வாய்ப்பு அதிகம் இருந்தது. இதைத் தவிர்க்க இருதரப்புக்கும் பொதுவான விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக முன்னிறுத்தலாம் என்றும், அதனை இடதுசாரிகள் ஆதரிக்கும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆனால், திருமாவளவனை முதல்வராக முன்னிறுத்தி திமுக -அதிமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்ததை, அதிமுகவில் ஒருதரப்பினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன. அதேநேரத்தில் வி்சிக உடனடியாக ஆதரவைத் தெரிவிக்கவில்லை. ஒருகட்டத்தில், திமுக - அதிமுக கூட்டணி அமையாததாலும் திருமாவின் கனவும் நிராசையாக போய்விட்ட காரணத்தாலும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என திருமாவுக்கு கட்சிக்குள் அழுத்தம் அதிகமானதாகவும், அதை தொடர்ந்து, தவெகவுக்கு ஆதரவளிக்க திருமாவளவன் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதற்குப் பிறகே தவெக ஆட்சி மலர்ந்தது. இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அதாவது விஜய் முதல்வராதைத் தடுக்கும் விதமாக இருந்த பல முட்டுக்கட்டைகளை அவர் உடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைமை மூலம் கேரள முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலி குட்டி, இடதுசாரிகளிடம் பேசி இந்த முயற்சியை தடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

