மிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு

மிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு
மிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு

கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ராகு இடம்பெயர்ந்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுவது வழக்கும். அதன்படி இன்று கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ராகு இடம்பெயர்ந்துள்ளார். சரியாக மதியம் 1.24 மணிக்கு மிதுனத்திற்கு ராகு இடம்பெயர்ந்தார். ராகு பெயர்ச்சியையொட்டி, ராகு ஸ்தலமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம்  நாகநாத ஸ்வாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பால் உள்ளிட்ட திரவங்களால் அபிஷேகமும் செய்யப்பட்டது. ராகு பகவானுக்கு ஆராதனையும் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல மகரத்தில் இருக்கும் கேது, தனுசு ராசிக்கு பிற்பகல் 2.04 மணிக்குப் பெயர்ச்சி அடைய உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com