Govt Hospital
Govt Hospitalpt desk

புதுக்கோட்டை: இருசக்கர வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்து - இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: நீதி அரசன் சாதிக்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்களின் மீது திருமயம் நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டியைச் சேர்ந்த தன்ராஜ் (40) மற்றும் அடுகபட்டியைச் சேர்ந்த வீரையா (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாலை விபத்து
சாலை விபத்து முகநூல்
Govt Hospital
நீலகிரி: முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் ஆன்லைன் மோசடி - மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவர் கைது

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த திருமயம் காவல்துறையினர் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com