மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவர் கைது
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவர் கைதுpt desk

நீலகிரி: முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் ஆன்லைன் மோசடி - மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவர் கைது

குன்னூர் அருகே முன்னாள் ராணுவ வீரரிடம், ஆன்லைன் வர்த்தகத்தில் 45 லட்சம் ரூபாயை மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை உதகை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published on

செய்தியாளர்: ஜான்சன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தனது சேமிப்பு பணம் ரூ.45 லட்சத்தை போலியான இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக உதகை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த (03.08.2024) தேதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

arrested
arrestedPT DESK

இதையடுத்து புகார்தாரரின் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை பெற்று, குற்றம் சுமத்தபட்டவர்களின் வங்கி எண்ணை கண்டு பிடித்தனர். அந்த வங்கி கணக்கு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியைச் சேர்ந்த ஷைலேஸ் குப்தா (56), ருஸ்தம் அலி (37) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்திர ராஜன் , சைபர் க்ரைம் ஆய்வாளர் பிரவீணா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மேற்குவங்க மாநிலம் சென்றனர்,

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவர் கைது
வாணியம்பாடி: தோல் தொழிற்சாலை உரிமையாளரின் செல்போனை பறித்துச் சென்ற இரு இளைஞர்கள் கைது

இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஷைலேஸ் குப்தா, ருஸ்தம் அலி ஆகிய இருவரையும் கைது செய்து உதகை அழைத்து வந்தனர். பின்னர் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிக்கையில் கூறும் போது... பொதுமக்கள் போலியாக இருக்கும் இணையதளங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம், சைபர் குற்றம் தொடர்பாக கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com