Tragedypt desk
தமிழ்நாடு
விராலிமலை|கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பை தாண்டி எதிரேவந்த கார் மீது மோதியதில் தந்தை, மகள் பலி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு
செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
மதுரை வஉசி நகரை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் திருச்சி அருகே உள்ள அவரது உறவினர் வீட்டு துயர நிகழ்விற்கு சென்று விட்டு மீண்டும் காரில் மதுரை திரும்பியுள்ளார். அப்போது, கார் விராலிமலை அடுத்த இடையபட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பு கட்டையை தாண்டி மறுபுறம் உள்ள சாலையில் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Car accidentpt desk
இதில், காரை ஓட்டி வந்த முருகன் (41) அவரது மகள் தியா (6) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த முருகனின் மனைவி சௌமி (34) மகன் வருண் கார்த்திக் (11) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விராலிமலை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.