சென்னை: அரசுப் பேருந்து மோதி விபத்து - தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் உயிரிழப்பு

பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் பணியாளர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
accident
accidentpt desk

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அருகில் ரேடியல் சாலையில், இன்று அதிகாலை பாத்திமா (45) என்பவர் துய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரசுப் பேருந்து அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

Accident
Accidentpt desk

இதைக் கண்ட சக தூய்மை பணியாளர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர் பாத்திமாவை பரிசோதித்து பார்த்துள்ளார். ஆனால் அவர், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

accident
எய்ம்ஸ் மருத்துவமனையையும் விட்டுவைக்கவில்லை..! டெல்லி கனமழைக்கு பலியான சிறுவர்கள்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com