‘இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமா?’ - வெளியான காங்கிரஸ் கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி எம்பி மாணிக்கம் தாகூர், எம்பி கார்த்திக் சிதம்பரம், எம்பி ஜோதிமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Congress
CongressANI

செய்தியாளர் - ராஜ்குமார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணி பேச்சுவார்ததை முடிவுற்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி...

1) கன்னியகுமரி தொகுதி - விஜய் வசந்த்

2) விருதுநகர் தொகுதி - மாணிக்கம் தாகூர்

3) சிவகங்கை தொகுதி - கார்த்திக் சிதம்பரம்

4) கரூர் தொகுதி - ஜோதிமணி

5) திருவள்ளுர் தொகுதி - சசிகாந்த் ஐஏஎஸ், செந்தில், முன்னாள் எம்பி விஸ்வநாதன் ரஞ்சன் குமார் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

Congress
“இவர்களாக இருக்குமோ?” - மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!

6) மயிலாடுதுறை தொகுதி - திருநாவுக்கரசர், பிரவின் சக்ரவர்த்தி, தேசிய சிறுபான்மை அணி இணை ஒருங்கிணைப்பாளர் மீரா ஹூசைன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

7) கிருஷ்னகிரி தொகுதி - செல்லகுமார்

8) கடலூர் தொகுதி - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ், திமுக
காங்கிரஸ், திமுகட்விட்டர்

9) திருநெல்வேலி தொகுதி - பீட்டர் ஆல்போன்ஸ் அல்லது முன்னாள் எம்பி ராமசுப்பு இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

10) புதுச்சேரி தொகுதி - வைத்தியலிங்கம்

கடந்த தேர்தலில் தரப்பட்ட ஆரணி, தேனி, திருச்சி தொகுதிகளுக்கு பதிலாக திருநெல்வேலி, கடலூர் மயிலாடுதுறை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தாங்கள் கேட்ட தொகுதிகளை திமுக-வினர் கொடுத்துள்ளார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com