\
முக ஸ்டாலின் / முதல்வர் விஜய்
முக ஸ்டாலின் / முதல்வர் விஜய்mk stalin

’ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றதற்கான ஆதாரம்..’ திமுக ஐடி விங் பதிவு!

மிசாவில் சிறைசென்றார் என்பதற்கான ஆதரம் இதுதான் என திமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளது. அதில் முதலமைச்சர் விஜய் குறித்தும், தவெகவினர் குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய விவாதத்தின் போது, முதல்வர் விஜய் ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை சென்றதை கேலி செய்த தாடை சைகை கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மிசா சிறை ஆதாரம் இல்லை என்ற விமர்சனத்துக்கு பதிலாக, திமுக ஐடி விங் ஆவணங்களை வெளியிட்டு தவெக, முதலமைச்சரை கடுமையாக தாக்கியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய விவாதத்தின் போது பேசிய முதல்வர் விஜய், ஸ்டாலின் சிறைசென்ற மிசா வழக்கை சுட்டிக்காட்டி தாடை சைகை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த ஸ்டாலின், அவசரநிலை கால சிறை அனுபவங்களையும், தாடை எலும்பு முறிவு உள்ளிட்ட கொடுமைகளையும் விளக்கியதோடு, எவ்வளவு கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.

முதலமைச்சரின் சைகைக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்த நிலையில், திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்தசூழலில் முக ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை சென்றதற்கான ஆதாரம் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஆதாரம் இதோ என திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. மேலும் அந்தப்பதிவில் முதலமைச்சர் மற்றும் தவெகவினரை தற்குறி என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

திமுக ஐடி விங் வெளியிட்டிருக்கும் பதிவில், ”எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.

வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள்.

மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?

பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!

Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?

முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.

நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு.

கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும்.

இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்.

வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.

காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள்” என கடுமையாக விமர்சித்து பதிவிடப்பட்டுள்ளது.

முக ஸ்டாலின் / முதல்வர் விஜய்
'தம்பி விஜய் சொன்னது உண்மை தான்..' மிசா சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com