மக்களவை தேர்தல் | கோவையில் 3 இயந்திரங்கள், 37 சின்னங்கள்... ஆனாலும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு?

மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இந்த முறை மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
கோவை தொகுதி - வாக்குப்பதிவு இயந்திரங்கள்
கோவை தொகுதி - வாக்குப்பதிவு இயந்திரங்கள்முகநூல்

செய்தியாளர் - சுதீஷ் 

ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில், கோவை தொகுதியில் 4 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், 26 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 37 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில், இதில் வாக்காளர்களை குழப்பும் விதமாக சில சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து பார்க்கலாம்...

கோவை தொகுதி
கோவை தொகுதி

அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் பெயரிலேயே இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒருவருக்கு விளக்குகளுடன் கூடிய மின்கம்பம் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் இரட்டை இலை போல் தெரிவதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை தொகுதி - வாக்குப்பதிவு இயந்திரங்கள்
“தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறை - EVM மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது” - ஆர்.எஸ்.பாரதி

இதேபோல திமுக வேட்பாளரான ராஜ்குமார் பெயரில் 4 சுயேட்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் ஜி ராஜ்குமார் என்பவருக்கு லேப்டாப், ஜிபி ராஜ்குமார் என்பவருக்கு கேக், எம் ராஜ்குமார் என்பவருக்கு திராட்சை, மேலும் ஒரு ராஜ்குமாருக்கு வைரம் ஆகியவை சின்னங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக ராஜ்குமார் - அதிமுக சிங்கை ராமச்சந்திரன்
திமுக ராஜ்குமார் - அதிமுக சிங்கை ராமச்சந்திரன்

மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றபோதும், அக்கட்சியின் டார்ச் லைட் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கோவையில் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யத்திற்கு, டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. இருப்பினும் இக்கட்சி இன்னும் அங்கீகாரம் பெறவில்லை, பதிவு செய்யப்பட்ட கட்சியாக மட்டுமே இருக்கிறது. மேலும் தற்போது தேர்தலில் போட்டியிடவும் இல்லை. இப்படியான சமயத்தில், மற்ற வேட்பாளர்களுக்கு இந்த சின்னத்தை ஒதுக்கலாம் என விதி இருக்கிறது.

அதன்கீழ், டார்ச் லைட் சின்னம் கோவையில் சுயேச்சை வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்படி 37 வேட்பாளர்கள் இந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதற்காக மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவுட்விட்டர்

முதலாவது இயந்திரத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களின் சின்னங்கள், இரண்டாவது இயந்திரத்தில் அதிமுக வேட்பாளரின் பெயரில் உள்ள சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்கள், மூன்றாவது இயந்திரத்தில் திமுக வேட்பாளரின் பெயர்களில் உள்ள சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்கள் இடம்பெற உள்ளன. முதலாவது இயந்திரத்திலேயே 12வது பட்டணத்தில் டார்ச் லைட் சின்னம் இடம்பெற உள்ளது. இதுபோன்ற காரணங்களால், வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் சின்னங்களை பார்த்து நிச்சயம் குழம்பிப் போகக்கூடும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com